கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எப்போது மார்ச் மாதத்தில் தான் வெயில் தொடங்கும். 

ஆனால் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கடுமையான வெயில் அடிக்கத் தொடங்கியது. இரவு நேரங்களில் வெப்பம் கடுமையாக புழுங்கித் தளளி வருகிறது. அதுவும் சென்னையில் கேட்க வேண்டாம். பகல் நேரங்களில் அடிக்கும் வெயிலுக்கு, இரவிலும் கடுமையான வெப்பமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான்  சென்னையில் இன்று அதிகாலையில் அடையாறு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலைகளில் தண்ணீர் திரண்டு ஓடியது. மேலும் சில்லென்னு இதமான காற்று வீசியது. நீண்ட நாட்களுக்குப் பின் மழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.