தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகததில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து சேலம், திருவண்ணாலை, வேலூர், நாமக்கல்  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த தொடர்மழை காரணமாக  திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில்  இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதே போல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.