வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

தென்மேற்கு வங்கக கடல்,கடலோர பகுதியில் வலுவிழந்த காற்றாழுத தாழ்வு பகுதியால் தமிழக உள்மாவட்டங்களான விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது என்றும் சென்னை வானிலை அயாவு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

திண்டிவனம்,மீனம்பாக்கம்,பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் 9 செ.மீ மழையும், மகாபலிபுரம் திருத்தணி, செஞ்சி, செய்யூர், பூண்டி உள்ளிட்ட இடங்களில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதலே லேசாக பெய்ய தொடங்கிய மழை, தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் நாளையும் சென்னை  பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.