காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது 

இதனால் 9 தேதி வாக்கில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால், தென் தமிழகத்தின் உட்பகுதிகளிலும் கடலோர பகுதிகளிலும்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவ மழையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கைக்கொடுக்க வில்லை...போதாத குறைக்கு வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குளிர்  ஆரம்பித்து வாட்டி வதைக்கிறது.

குளிர் ஆரம்பித்து விட்டதால், நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு, மழை வெளுத்து வாங்கியதால் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு கால கடும் வறட்சிக்கு முடிவு  ஏற்பட்டது. 

இந்த நிலையில், அடிக்கடி ஏற்படும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளாவது தமிழகத்தில் நல்ல மழை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நிலையில், வரும் 9 தேதி முதல், காற்றழுத்த தாழ்வு  நிலை வீரியம் குறையும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தென்மாவட்ட மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.