தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக  கடல் கொந்தளித்து காணப்படுகிறது.

இதே போன்று, உள்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம்  மற்றும் புதுவையில் மிதமான மழையும்,ஒரு சில இடங்களில் கனமான மழையும் பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை  அல்லது இரவு நேரங்களில் மட்டும்  இடியுடன் கூட கனமழை பெய்யும் என சென்னை  வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது  இரவு நேரத்தில் மட்டும் இடியுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என  தகவல் தெரிவிக்கப் பட்டு உள்ளது

வெப்பநிலை

இந்த இரண்டு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்,

குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வெயில் நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில், அவ்வப்போது  திடீரென மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.