கர்நாடகாவை தொடர்ந்து..புதுச்சேரியில் ‘பர்தா’ அணிய தடை.. கொதித்தெழுந்த இயக்கங்கள்..

புதுச்சேரி அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியரை கண்டித்து மாணவர் கூட்டமைப்பு மற்றம் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Puducherry Government High School has been besieged a teacher who protested against the wearing of a burqa by an Islamic student

கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் பியு கல்லூரிக்கு ஹிஜாப் எனப்படும் ஸ்கார்ஃப் அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் உடுப்பி, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பிரத்யேக ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு எழுந்துள்ளது.

Puducherry Government High School has been besieged a teacher who protested against the wearing of a burqa by an Islamic student

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என மாணவர்கள் கழுத்தில் காவி துண்டை அணிந்து வருகிறார்கள். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுவான டிரஸ் கோடு விதியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சூடுபிடித்த நிலையில், புதுச்சேரியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 

புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோயில் எதிரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வழக்கமாக பள்ளிக்கு பர்தா அணிந்து வருவது வழக்கம். பின்னர் வகுப்பறைக்கு செல்லும் போது அதனை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுவார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கத்துக்கு மாறாக பர்தாவுடன் வகுப்பறையில் அமர்ந்து உள்ளார். 

Puducherry Government High School has been besieged a teacher who protested against the wearing of a burqa by an Islamic student

இதனை கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு இது சம்பந்தமாக பேசி உள்ளனர். ஆனால் அதற்கு பெற்றோர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி பர்தா அணிந்துக்கொண்டு தான் வருவார் என்று இஸ்லாமியருக்கு ஆதரவாக சிலர் பள்ளியில் வந்து பேசி உள்ளனர். 

இந்த நிலையில் இன்று மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், தொகுதி திமுக நிர்வாகி சங்கர் மற்றும் பலர் பள்ளிக்கு வந்து மாணவிக்கு ஆதரவாகவும், ஆசிரியரின் செயலுக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் காவல்துறையினர், பள்ளிக்கல்வி முதன்மை அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். 

Puducherry Government High School has been besieged a teacher who protested against the wearing of a burqa by an Islamic student

தொடர்ந்து அந்த அமைப்பினர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர்‌‌. கடந்த ஒருவாரமாக கர்நாடக மாநிலம் சிவமோகாவில் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த விவகாரம் தேசிய அளவி பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், புதுச்சேரியில் பள்ளி மாணவி பர்தா அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios