Russia Ukraine War: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனநல ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.

உக்ரைன் ரஷ்யா இடையே 14 வது நாளாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கீவ், கிமி உள்ளிட்ட இடங்களில் போர் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது.இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா எனும் திட்டத்தின் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

இதுவரை உக்ரைனிலிருந்து 16,000 மேற்பட்ட மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் தமிழக மாணவர்கள் 771 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழக மாணவர்களை மீட்பதற்கான முயற்சியில் தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் , தங்களது படிப்பை இந்தியாவில் தொடரும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மேலும் படிக்க: TET Exam: அலர்ட்..! ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு.. முழு விவரம்..

போர்ச்சூழலில் உணவு, உரிய இடம் இன்றி ,அச்சத்துடன் இருந்த மாணவர்கள் தற்போது தாயகம் திரும்பி இருந்தாலும், அவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது முக்கியமான ஒன்று. அதன்படி உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவை என்பது அரசின் கவனத்திற்கு ஊடகங்கள் வாயிலாக கொண்டு சொல்லப்பட்டன.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மையத்தை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இத்திட்டத்தை மையத்தை தொடங்கி வைத்தார். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திமுக எம்எல்ஏவும், மருத்துவருமான எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க: Gold Loan waiver: மீண்டும் ஒரு தணிக்கை.. உத்தரவு போட்ட கூட்டுறவு துறை.. தள்ளிப்போகும் நகைக்கடன் தள்ளுபடி..