முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்ற குடியரசு தலைவர்..! பன்னோக்கு மருத்துவமனையை திறக்க தேதி குறித்த தமிழக அரசு

கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை 5.6.2023 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

President approves opening multispeciality hospitalHospital in Chennai

பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக்பெரிய அளவ்வில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிநி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற குடியரசு தலைவர் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023)  இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து,

President approves opening multispeciality hospitalHospital in Chennai

குடியரசு தலைவரை சந்தித்த முதலமைச்சர்

சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய. சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும்  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 

President approves opening multispeciality hospitalHospital in Chennai
 ஜூன் 5 ஆம் தேதி சென்னை வரும் குடியரசு தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

டெல்லி ஏர்போர்ட்டில் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios