Asianet News TamilAsianet News Tamil

சிலைகளை வைக்க அரசு இடம் தரவில்லை..! பகீர் கிளப்பும் பொன் மாணிக்கவேல்!

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 89 சிலைகளை வைக்க அரசு இடம் தரவில்லை என ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 89 சிலைகளை வைக்க அரசு இடம் தரவில்லை என ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புக் காவல்துறையின் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இன்று பறிமுதல் செய்து கைப்பற்றினர். 

இதுகுறித்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிலைகளை வைக்க அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என கூறிவிட்டனர். அதிகாரிகள் தங்களது சொந்த பணத்தில் சிலைகளை கொண்டு செல்கின்றனர். இந்த முறை மாற்றப்பட வேண்டும். 

"

சிலைகளை பறிமுதல் செய்ததற்கான செலவினங்களை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. போலீசார் கைப்பற்றியவற்றில் 75 சதவீத சிலைகளை தீனதயாளன் விற்றுள்ளார். கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் பழமையானவை. இவைகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். 

Video Top Stories