Asianet News TamilAsianet News Tamil

காதல் தம்பதிக்கு மிரட்டல்... பாதுகாப்பு தர போலீசாருக்கு உத்தரவு

காதல் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Police protection for love couple
Author
Tamil Nadu, First Published Feb 1, 2019, 12:47 PM IST

காதல் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் அக்கினி ராஜ்(21). இவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். வியசர்பாடியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வந்த பிரபாவதி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதற்கு பிரபாவதியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் வள்ளலார் நகரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.Police protection for love couple

தற்போது அவர்கள் திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காதல் ஜோடிக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்களுக்கு திருவொற்றியூர் காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஆய்வாளர் ரவிசந்திரன் என்பவர் தனியாக நியமிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு சென்று பட்டா புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios