கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபு இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ஆய்வாளர் பாபு, இவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. 

விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததால் இவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் வாந்தி எடுத்துள்ளார். தனக்கு முடியவில்லை தொடர்ந்து வாந்தி வருகிறது, மயக்கமாக உள்ளது என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் எடுத்து கூறியுள்ளார் ஆய்வாளர் பாபு.

ஆனால் லஞ்ச ஒழிப்பு துறையினரே எதையும் பொருட்படுத்தாமல் பாபு கூறுவது பொய் என எண்ணி அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதை தவிர்ப்பதற்காகவே இப்படி செய்கிறார் என அவர்கள் எண்ணியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவருக்கு உடல் நிலை மோசமானதை அறிந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாராகினர். அவரச அவசரமாக இவரை அருகில் இருந்த தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆய்வாளர் பாபு பரிதாபமாக உயிரிழந்தார். 

விசாரணையின் போது காவல் ஆய்வாளர் ஒருவரே பரிதாபமாக மரணமடைந்த சம்பவர் கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.