தமிழகத்தில் PM SHRI பள்ளிகள்.. மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்து - முழு விவரம்!
PM SHRI Schools in Tamil Nadu : PM SHRI பள்ளி என்ற முயற்சியானது, மத்திய அரசு, மாநில/UT அரசாங்கங்கள், KVS மற்றும் NVS உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 14,500 PM SHRI பள்ளிகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தான் PM SHRI பள்ளி திட்டம். இந்நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று இன்று மார்ச் 15ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டான 2024-25 ஆம் ஆண்டு தொடக்கத்தில் PM (SHRI) பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தால் கையெழுத்திடப்படும், என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
தமிழக அரசுக்கும், கல்வி அமைச்சகத்துக்கும் இடையேயான இந்த கூட்டாண்மை வலுவான முறையில் உள்ள மத்திய-மாநில உறவுகளை குறிக்கிறது. "இந்த முயற்சியை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம், ஏனெனில் இது தமிழக மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது" என்று அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
PM SHRI பள்ளி முன்முயற்சியானது மையத்தின் மத்திய நிதியுதவி திட்டமாகும். KVS மற்றும் NVS உட்பட மத்திய அரசு, மாநில/UT அரசாங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 14,500 PM SHRI பள்ளிகளை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது பல்வேறு வகையான கற்றல் அனுபவங்களை வழங்குவதோடு, அனைத்து மாணவர்களுக்கும் கற்றலுக்கு உகந்த நல்ல உள்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின்கீழ் வரும் இந்த PM SHRI பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கூறியது குறித்த கேள்விகள் இப்பொது ஏல துவங்கியுள்ளது.
ஆபாச வீடியோ விவகாரம்.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு - பாஜக தலைவர் அகோரம் மும்பையில் கைது!