வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின், ஆங்கில ஆசிரியை மாலா, 24 வயதான . இவருக்கு இன்றும் திருமணமாகவில்லை. இவர் மீது, அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2  மாணவன் ரஞ்சித் ஒரு தலையாக காதல் கொண்டான்.

இதையடுத்து அந்த மாணவனை அழைத்து அறிவுரை சொன்ன ஆசிரியர், அவரை திருத்த நினைத்தார். ஆனால் ஆகிரியையின் அறிவுரையைப் பொருட்படுத்தாத ரஞ்சித் ஆசிரியையின் மொபைல் போனுக்கு, காதல் ரசம்சொட்டும் குறுந்தகவல்களை, அனுப்பிக் கொண்டே இருந்தான்

மேலும் .பள்ளிச் சுவரில், ஆசிரியை குறித்து காதல் கவிதைகளை எழுதினான். அதுவும் கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, 160 காதல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான்.

இதனால் ஆத்திமடைந்த ஆசிரியை மாணவனை தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை புகார் செய்தார். அதிகாரிகள் விசாரணையில், புகார் உறுதிப்படுத்தப்பட்டது.'இது குறித்த விசாரணைஅறிக்கை, கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, வேலுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியைக்கு டார்ச்சர் கொடுத்த குற்றத்துக்காக மாணவன் ரஞ்சித்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.