தஞ்சை அருகே உள்ள மணல்மேடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுடைய மகன் சதீஷ்கண்ணா.

நேற்று மாலை சதீஷ்கண்ணா அதே பகுதியில் உள்ள ஒரு காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் படிக்கட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மணல்மேடு ஓடக்கரை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ் என்பவர் வந்தார்.

இந்த நிலையில் சதீஷ் கண்ணா எச்சில் துப்பினார். இது தெரியாமல் சுரேஷ் மீது விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சதீஷ் கண்ணாவிடம் தகராறு செய்தார். உடனே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து சுரேஷ் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து அவரது சகோதரர்கள் சேகர் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் மேலும் 2 பேரை அழைத்து கொண்டு நேற்று நள்ளிரவு சதீஷ் கண்ணா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று 5 பேரும் சதீஷ்கண்ணாவிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது சதீஷ்கண்ணாவின் தந்தை கோவிந்தராஜ், தாய் இந்திராணி மற்றும் பாட்டி சாம்பல்அம்மாள் ஆகியோர் வந்தனர். அவர்கள் 3 பேரும் தகராறு செய்த, சுரேசை சத்தம் போட்டு தடுத்தனர்.

இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் சதீஷ்கண்ணா, இந்திராணி, கோவிந்தராஜ், மற்றும் சாம்பள் அம்மாள் ஆகியோர் வெட்டினர்.

இதில், இந்திராணிக்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இந்திராணி பரிதாபமாக இறந்தார்.

மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மகன் கண் முன்பு பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!

மதுரையில் 17 வயது மாணவன் ஒருவன் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை அழகிரி நகரில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், மாணவியின் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி அந்த மாணவியை கற்பழிக்க முயன்றுள்ளார். அந்த மாணவனின் இந்த செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கதறி கூச்சிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது மாணவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.