தற்போது பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக  பெட்ரோல் விலை இறங்கு முகத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.16 ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.67.16 ஆக  விற்பனை செய்யப்படுகின்றது.  

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சியை சந்தித்து இருப்பது இந்திய வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் அடுத்த நாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அரு வரை பெட்ரோல், டீசல் விலை குறியத்தான் செய்யும் என்கின்றனர் எதிர்க்கட்சியுனர். எது எப்படியோ  ? பெட்ரோல், டீசல் விலை குறிந்தால் போதும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.