Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் கேப் விட்டு மறுபடியும் ஆரம்பிச்சாச்சு… கன்னத்தில் கை வைக்கும் வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை கவலைப்பட வைத்துள்ளது.

Petrol diesel rate changed
Author
Chennai, First Published Oct 27, 2021, 7:43 AM IST

சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை கவலைப்பட வைத்துள்ளது.

Petrol diesel rate changed

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது நாள்தோறும் விலை நிலவரத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இந் நிலையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் ஒரு லிட்டர் ரூ.104.83ஐ எட்டி உள்ளது.

Petrol diesel rate changed

டீசல் விலையும் 33 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் 100.92 காசாக இருக்கிறது. தொடர்ந்து ஏறிக் கொண்டே விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios