இன்று கரையை கடக்கும் உள்ள பெதாய் புயல் காக்கிநாடா மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் ஏனம் மாவட்டத்தையும் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கக்கடலில் தற்போது நிலைக்கொண்டுள்ள புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவில் அங்கேயே மையம் கொண்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா கடற்பகுதியில் புயல் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை நாகப்பட்டினம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் முழுமை அடையாத நிலையில் மீண்டும் தற்போது உருவாகியுள்ள புயலால் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் ஏனம் பகுதியில் புயல் பாதிப்பு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இன்று மதியம் காக்கிநாடா பகுதியில் பெதாய் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கூட 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 பயணிகள் ரயில் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தமிழகத்தில் புயல் தாக்குதலால் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள புயல் பெரும் அளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆந்திர அரசு 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நேற்று சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு குளிராகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தை காட்டிலும் ஆந்திர மாநில கடற்கரை பகுதியான காக்கிநாடா சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை மற்றும் அதிக காற்றின் காரணமாக இயற்கை பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது