காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணைய தலைலவர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார்.  கடந்த சில நாட்களுக்கு முன், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அனுமதியளித்தது.

இதனால், மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததற்காக, மசூத் உசேன், கர்நாடக அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நீர்வள ஆணைய தலைவராக மசூத் ஹூசைன் உள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும். மசூத் ஹூசைன் பாரபட்சமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுகிறார். மத்திய நீர்வளத்துறை தலைவர், காவரி மேலாண்மை ஆணைய தலைவராக இருப்பது பொருத்தமற்றது என கூறப்பட்டுள்ளது.