பெரம்பலூர், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்.  ஸ்டீல் ஃபேக்ட்டரி ஒன்றை நடத்தி வருகிறார். தி.மு.க., பிரமுகரான இவர், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர்.

இந்நிலையில் மயூரி என்ற பெயரில், பியூட்டி பார்லர் நடத்தி வரும் செந்தில்குமார் என்பரின் மனைவி சத்யா தனது  கடையை விரிவுபடுத்த, 20 லட்சம் ரூபாயை, சில ஆண்டுகளுக்கு முன், செல்வகுமாரிடம் கடனாக வாங்கியதாக தெரிகிறது.

கடனை திருப்பி தராமல், சத்யா காலம் தாழ்த்தி வந்ததால் . ஆத்திரமடைந்த செல்வகுமார், கடந்த 25.5.2018 அன்று  , சத்யாவின் கடைக்குள் அத்துமீறி புகுந்து, அவரை சரமாரியாக அடித்து, உதைத்தார். அப்போது, பெரம்பலூர் போலீசில் சத்யா கொடுத்த புகாரை வாபஸ் பெற்றதையடுத்து, இருவரும் சமாதானமாக போவதாக எழுதிக் கொடுத்து சென்றனர்.

மேலும் இது தொடர்பான சிசிடிவி ஃபுட்டேஜ் திமுக தலைவர் ஸ்டாலினின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்கப்படடதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ.ராசா, பெரம்பலூர் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கும் என நினைத்த சில திமுக பிரமுகர்கள் , சிசிடிவி காட்சிகளை சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர்தான் இப்பிரச்சனை சூடு பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  தாக்குதலில் ஈடுபட்ட  செல்வகுமார் மீது புகார்கள் ஏதும் கொடுக்கப்பட வில்லை. ஆனாலும் இச்சம்பவம் குறித்து மாதர் சங்கங்கள்  போர்க்கொடி தூக்குவார்கள் என்பதால் ஐஜி உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே செல்வகுமாருக்கும், சத்யாவுக்கும், சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால்  சில மாதங்களாக, பெரம்பலூர் நகரில் உள்ள மற்றொரு முக்கிய, தி.மு.க., நிர்வாகியுடன் சத்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

.

இதையறிந்த செல்வகுமார், ஆத்திரமடைந்து சத்யாவை தாக்கி, தான் செலவு செய்த பணத்தை கேட்டதாக தெரிகிறது. செல்வகுமாரை போலீசார், கைது செய்த போது, அவர், நிருபர்களைப் பார்த்து, 'இதற்கெல்லாம் காரணம், தி.மு.க., நகர செயலர் பிரபாகரன் தான்' என, கூறி சென்றார். இதனால், சத்யாவின் புதிய கள்ளக் காதலன்  பிரபாகரனாக இருக்கலாம் பெரம்பலூர் முழுக்க பேச்சு அடிபடுகிறது. 

ஏற்கனவே இந்த பியூட்டி பார்லர் பெண் சத்யா ,  செல்வகுமாருக்கு 12 ஆவது ஆளாம். தற்போது அவர் கைமாறியதால் ஏற்பட்ட ஆத்திரம்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.