"நம்பிக்கை இழந்துவிட்டோம்.. காப்பாற்றுங்கள்" உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்..

ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மருத்துவ மாணவரை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Parents call on Tamil Nadu government to release medical student stranded in Ukraine due to Russian war

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் வேலை நிமித்தமாக அங்கு சென்று தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதேபோல, மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களும் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

Parents call on Tamil Nadu government to release medical student stranded in Ukraine due to Russian war

இந்த நிலையில் அந்த நாட்டுக்கு தமிழகத்தில் அருண் பிரசாத் என்ற மாணவர் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.அவர் அங்கு போர் நடந்து வரும் நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார். ஆகவே அவரை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்று பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருண் பிரசாத் என்ற மருத்துவ மாணவரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ‘ரஷ்யா - உக்ரைன் போர் நடப்பதால், மளிகை பொருட்கள், தண்ணீர் என அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இந்திய தூதரகம் மேற்கு உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். நாங்கள் இருப்பதோ உக்ரைன் கிழக்கு பகுதியில். 

இங்கு 4000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறோம். எங்களை கூடிய சீக்கிரம் இந்திய அரசு காப்பாற்றணும். நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து மேற்கு உக்ரைன் செல்ல சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் ஆகும். எங்களுக்கு அருகில் ரஷ்யா எல்லை இருக்கிறது. எங்களை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் காப்பற்ற வேண்டும்’ என்று அந்த காணொளியில் அருண் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் அருண் பிரசாத்தின் தொலைபேசி எண் +380 63 513 4367 ஆகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios