அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் வரும் 13 ம் தேதி எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை விசாரணைக்காக ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தண்டனை பெறும் முன்னர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியுள்ளார். அதில் முறைகேடு நடந்திருப்பதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் வரும் 13ம் தேதி சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக வருமான வரி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த சிறைத்துறையிடம் அனுமதி கேட்டனர். இதற்கான அனுமதியையும் சிறைத்துறைவழங்கியுள்ளது. இந்த விசாரணையும் வரும் 13ம் தேதி அன்றே நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.