அபார்ட்மெண்டில் ஆன்லைன் மூலம்  விபச்சாரத் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி  உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகரில் நேற்று மாலை 2 வாலிபர்கள், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், சண்டை போட்டு கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து  போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது விசாரிக்கையில், அதே பகுதியை சேர்ந்த ராக்கி, அரிபிரசாத்  என தெரிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது பற்றி போலீசார் கூறுகையில்:  ராக்கி தனது மனைவி பிரியாவுடன், கடந்த 2 மாதத்துக்கு முன்  மாதவரம் பகுதியில்  குடியேறினர். பின்னர், இருவரும் சேர்ந்து ஆன் லைனில் விபசார  தொழில் நடத்தி வந்தனர். இதற்காக, தென் மாவட்டங்களை சேர்ந்த 3 இளம்பெண்கள் மற்றும்  புரோக்கர்களை 2 பேரை வீட்டில்  தங்க வைத்திருந்தார்களாம். ஆன்லைன் மூலமாக வரும்  கஸ்டமர்களை ராக்கி வீட்டிற்கு அழைத்து  விபசாரத்திற்காக அழைத்து வந்த  இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க வைத்துவிட்டு பணம் சம்பாதித்துள்ளார். 

இந்நிலையில், ரோட்டில் சண்டைபோட்ட  அரிபிரசாத் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக  இருந்துள்ளார். பின்னர், அவர் புறப்பட்டபோது, ராக்கி கூடுதலாக பணம் கேட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு  அடித்துக் கொண்டுள்ளனர். இதைபார்த்த பொதுமக்கள்  போலீசாருக்கு  தகவல்  கொடுத்ததால்  இவர்கள் நடத்திய இந்த ஆன்லைன் விபச்சாரம் அம்பலமானது. 

இதையடுத்து மாதவரம் சென்ற  போலீசார், ராக்கி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள அறைகளில் ராக்கி மனைவி பிரியா மற்றும்  3 இளம்பெண்கள்  புரோக்கர்கள்  சங்கர், மோகன் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து, ராக்கி மனைவி பிரியா,  இடைத்தரகர்கள் சங்கர், மோகன் மற்றும் 3 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி ராக்கி உள்பட 4 பேரை புழல் சிறையிலும், 4 இளம்பெண்களை பெண்கள் காப்பகத்திலும் அடைத்தனர்.