வரும் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு
வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பரவல் இப்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 1500க்கும் கீழாக பதிவுகள் பதிவாகி வருகிறது.
இந் நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் சில முக்கிய அறிவிப்புகளையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்கள் திறந்து இருக்கும்.
கடைகள், ஓட்டல்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம். திருமணங்களில் இனி 100 பேரை கலந்து கொள்ளலாம். இறப்பு சார்பு நிகழ்வுகள் என்றால் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம். வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கலாம்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடுக்க வேண்டும். ஆனால் அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.