ஓரிரு நாட்களில் விடைபெறும் நிலையில், அக்., 20 முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர்  வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பொழியும்  காலமாக உள்ளது. தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாகவே பெய்தது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை இந்த ஆண்டும் அதன் முழு கொள்ளவை எட்டியது. தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் கோவை பகுதியில் 50 சதவீதம் கோவையில் கூடுதலாகவே பதிவாகியுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் சார்பில், பருவமழை கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி , தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், நான்கு மாதங்களில் கோவையில், 18 மழை நாட்களில் 308 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆகஸ்ட் , 9ம் தேதி, ஒரே நாளில் மட்டுமே, 130 மி.மீ., மழை கிடைத்தது. 

அதன்படி, நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை, 50 சதவீதம் அதிகமாகவே பெற்றுள்ளோம் என தெரிவித்தார். தென்மேற்கு பருவ காற்று ஓரிரு நாட்களில் வடகிழக்காக மாறிவிடும். வடகிழக்கு பருவமழை, அக்டோபர்  20 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழையால் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்பெறும். மற்ற மாவட்டங்கள் குறிப்பாக டெல்டா மற்றும் வட மாவட்டங்கள் வடகிழக்குப் பருவமழையையே நம்பியுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் 20 ஆம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்