Asianet News TamilAsianet News Tamil

கஜாவும் இல்ல… கூஜாவும் இல்ல… தப்பியது சென்னை…. திசைமாறி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது புயல் !!

கஜா புயல் நாகை, சென்னை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இநந்லையில் கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

no kaja strom in chennai
Author
Chennai, First Published Nov 12, 2018, 8:40 PM IST

தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

no kaja strom in chennai

கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் கஜா புயல் திசை மாறி தறபோது கடலூர் பாம்பன் இடையே கரைய்க் கடக்கும் என் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

no kaja strom in chennai
இது  தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் , கஜா புயல் காரணமாக தஞ்சை,திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.
no kaja strom in chennai
கனமழையை பொறுத்தவரை தஞ்சை,திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். நாகை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல்மட்டம் உயரக்கூடும். கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
no kaja strom in chennai

கஜா புயல் நகர்வு காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படும்.  ஒரு சில இடங்களில் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios