நிர்மலா தேவி பரபரப்பு தகவல்.! தவறான செயலுக்கு அழைக்க சொன்ன 2 முக்கிய புள்ளி இதோ..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.

இதனை தொடர்ந்து நேற்று நிர்மலா தேவி 12 நாட்களுக்கு தற்காலிக மாக  சிறையில் அடைக்கப்பட்டார்.

துருவி துருவி விசாரணை

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூடுதல் சூப்பிரண்டு மதி, துணை சூப்பிரண்டு தனபால், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மயில் ஆகியோர் பல்வேறு கேள்விகளை கேட்டும், பேராசிரியை நிர்மலா தேவி ஒரே பதிலையே தந்துள்ளார்.

அதில், "நன் பேசியதை மாணவிகள் தவறாக புரித்துக் கொண்டு  உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இருப்பினும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் திருச்சுழியைச் சேர்ந்த கருப்ப சாமி, துறைத்தலைவராக பணியாற்றும் மதுரை முருகன் தான், தன்னை மாணவிகளிடம் இது போன்ற செயலுக்கு   அழைக்க சொல்லி கட்டாயப்படுத்தினர் என தெரிவித்து உள்ளார்.

எப்படி அறிமுகம்....?

ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட கருப்பசாமி, அருப்புக்கோட்டை  கல்லூரியில் நிர்மலா தேவியுடன் படித்தவராம். இதே போன்று மதுரை  முருகனும் அறிமுகமாகி உள்ளார்.

இவர்கள் கேட்டதன் பேரில் தான் மாணவிகளிடம் தான் இவ்வாறு பேசியதாக அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்க போலீசார் சென்ற போது, அவர்கள்  ஏற்கனவே மாயமாகி உள்ளனர்.

மேலும் பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளிடம் இவ்வாறு பேசும் போது பாலியல் தொடர்பான வார்த்தையை நேரடியாக எங்கும் பயன்படுத்தாமல் பேசி உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களை வைத்தும் போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

விசாரணை முடிவில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.