கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக கைது செய்து தற்போது வெளிவந்துள்ள நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.பின்னர் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்திலேயே அமர்ந்து கொண்டு திடீரென தியானத்தில் ஈடுபட்டார். அப்போது தன் மனதிற்குள் எதையோ நினைத்துக்கொண்டு, சற்று மெதுவாக தானாக பேச தொடங்கினார்.

இன்னும் சொல்லப்போனால் அருள்வாக்கு சொல்வது போல கண்களை மூடிக்கொண்டு, தொடர்ந்து ஏதோ ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது, "தனக்கு  இன்று காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து விட்டதாகவும் தனக்கு எதிராக சதி செய்த மாணவிகள் தூக்கு போட்டு இறந்து விட்டார்கள் என்றும் பேசியுள்ளார். அப்போது தன் தலைமுடியை சற்று வெட்டி எடுத்து தனது காதில் வைத்தவாறு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டு... பின்னரே வளாகத்தை விட்டு வெளியேறி உள்ளார். இந்த சம்பவத்தால் நீதிமன்ற  வளாகத்தில் இருப்போரை அதிர்ச்சி அடைய செய்தது.