கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, கல்லூரி அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே....

சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்கொண்ட விசாரணையின் போது, பல  திடுக்கிடும் தகவல்களை கூறி உள்ளார் நிர்மலா தேவி.

அதன் விளகம்  பின்வருமாறு: 
 
"எனக்கும், அருப்புக்கோட்டை சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்  இருக்காங்க...2003-ம் ஆண்டு என கணவர் சென்னையில் வேலை  செய்த  போது, அவருக்கு பக்கத்துக்கு வீட்டு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததால் எங்களுக்குள்  பிரச்சனை வந்தது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் பழக்கம்  ஏற்பட  நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். பின்னர் 2008-ல் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் நன்றாக பழகினேன்... எனக்கும் என் கணவருக்கு இடையே உள்ள பிரச்னை தீர்த்து வைப்பதற்காக, அவருடைய நண்பர் ஒருவர் அறிமுகமானார் நான் அவருடன் நெருக்கமாக் பழக ஆரம்பித்தேன்..பின்னர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். 

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக இந்து அறநிலையதுறை  அதிகாரி ஒருவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் அவருடன் நன்கு பேசி பழகி வந்தேன் பின்னர் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. 

முருகன் தான், பல்கலை  கழக  விவகாரத்தில் எதாவது உதவி வேண்டும் என்றால் கருபசாமியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என நம்பர் கொடுத்தார். பின்னர் அவரிடம் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவிகள் கிடைப்பார்களா என தொடர்ந்து கேட்டு வந்தனர். சரி எனக்கு உதவி செய்கிறார்களே என எண்ணி  தான், நானும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என நிர்மலா  தேவி கூறி உள்ளார்.

இதெல்லாம்  ஒரு பக்கம் இருக்க தாத்தா போன்றவர் என்று  அந்த ஆடியோவில் பேசியது தற்போது பல சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அதாவது முருகன் மற்றும் கருப்பசாமிக்காக மட்டும்தான் இவர் இப்படி  பேசினார் என சிபிசிஐசி விசாரணையின் போது தெரிவித்து இருந்தாலும் யார் அந்த தாத்தா என ஒரு சந்தேகம் எழ தான் செய்கிறது.