வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார் . 

கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 3 சென்டி மீட்டர் மழையும், ஆனைக்காரன் சத்திரம் வேதாரண்யம் கமுதி , ரெட்ஹில்ஸ் ,  பூண்டி ,  ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், திருவாரூர், பேராவூரணி, மணமேல்குடி, பொன்னேரி, நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், முத்துப்பேட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  என்றும்  நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதிகபட்ச வெப்பநிலை  30 டிகிரி செல்சியசஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும்  பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.