சமுக செயற்பாட்டாளர் முகிலன் ரயில் நிலையத்திற்குள் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சமுக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த 2 வாரத்திற்கு மேலாக காணவில்லை என புகார் எழுந்துள்ளதுள்ளது. இவருடைய சொந்த ஊர் சென்னிமலை. பல வருடங்களாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்தார். 

இந்த நிலையில் இவரை கடந்த 2 மாதங்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் முகிலன் கிடைக்கவில்லை. இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 

இதற்கிடையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமுக செயற்பாட்டாளர் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணையில் புதிய சி.சி.டி.வி காட்சி சிக்கியுள்ளது. அதன்படி, மாயமான நாளாக கூறப்படும் அந்த நாளில்  ரயில் நிலையத்தில் இருந்து சரியாக இரவு 10.00 மணிக்கு வெளியே செல்கிறார். மீண்டும் 11.30 மணிக்கு வேறு ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வருவது தெரியவந்துள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முகிலனை கண்டுபிடிக்க தனிப்படை மும்முரமாக இறங்கி உள்ளது. மேலும் அவரது வீட்டில் ஏதாவது பிரச்சனையா..? அல்லது இதற்கு பின் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா ?? என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணையில் இறங்கியிள்ளது சிபிசிஐடி போலீசார்.