பாலூட்டும்போது அதிக வலி ஏற்பட்டதால், பெற்ற தாயே தன் இரண்டு மாதக் குழந்தையைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கண்ணா - உமா. இவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். வெங்கண்ணா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு பவர் கட் ஆனதால், இரவு தூங்கும் போது காற்று வர வேண்டும் என்பதற்காக கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கும் போது குழந்தை கடத்தப்பட்டு உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர் 

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிசிடிவி கேமரா பதிவில் அன்று இரவு நைட்டி அணிந்த ஒரு பெண் குழந்தையை தூக்கி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தாய் மீதே சந்தேகம் அடைந்த போலீசார் குழந்தையை கொன்று தாயே நாடகமாடியதை உறுதி செய்தனர். 

அதற்கேற்றவாறு உமாவும் தன் குழந்தையை தானே கொன்று விட்டதாக தெரிவித்து உள்ளார். பாலூட்டும் போது வலி ஏற்பட்டதால் கோபத்தில் குழந்தையை கொன்று விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். பின்னர் உமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்..