Asianet News TamilAsianet News Tamil

ஜகா வாங்கிய மோகன் லாசரஸ்...!! நான் அப்படி பேசவே இல்லை என அந்தர் பல்டி!

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், தமிழகத்தில்தான் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது என்றும், தமிழகத்தில் கோயில்கள் தான் சாத்தான்களின் அரண்கள் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், தமிழகத்தில்தான் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது என்றும், தமிழகத்தில் கோயில்கள் தான் சாத்தான்களின் அரண்கள் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் உள்ள மதநம்பிக்கை பற்றிய கேள்விக்கு, ஊழியர்களிடம் விளக்கம் சொன்னபோது இது எடுக்கப்பட்டது என்றும், சில வருடங்களுக்கு முன்பாக இது குறித்து பேசியதாகவும் கூறினார். நான் பேசியதை எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், நான் பேசியதைக் கேட்டு இந்து சகோதரர்கள் வருத்தமடைந்திருந்தாள் அதற்கு தான் வருத்தப்படுவதாகவும் மோகன் சி.லாசரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Video Top Stories