அழகி பட்டம் வென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர் திமுக பிரமுகர் என தகவல் வெளியாகியுள்ளது.  கோவையை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் இவர் மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர், இந்நிலையில் சமீபத்தில் திருமணமானவர்களுக்கான அழகிப்போட்டியில்  மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றார். 

அதில் சோனாலி கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிகவும் பிரபலமானார், அதேநேரத்தில்  அரசியிலில் இறங்க வேண்டும் என்றும்  இவருக்கு ஆர்வம்  இருந்துவந்தது, இந்நிலையில்  அதிமுகவில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்நிலையில்  சோனாலி சாய்பாப காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் சமூக வலைத்தளத்தில் சிலர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வருவதாகவும்,  அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவரிட் புகார் மனுமீது போலீசார் விசாரணை நடத்தியதில்,  சோனாலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவதூறு  பரப்பியதாக,  ஈரோடு மாவட்டம்  20 ஆவது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை கைதுசெய்தனர்.  சோனாலியின் புகாரில் உண்மை இருப்பதை உறுதியானதையடுத்து  ரகுபதி மீது பெண்கள் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.