புதுக்கோட்டையில் மின் இணைப்பு சரி செய்யும் போது மின்சாரம் தாக்கிய ஊழியர் ஒருவரை காப்பாற்ற அமைச்சர் விஜய பாஸ்கர் ஓடோடி சென்றார்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 

நாமக்கல் மாவட்டம குமாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தேவணாங்குறிச்சியை சேர்ந்த மோகன் இவர்கள் இருவரும் கீரனூர் களமாவூர் மூகாம்பிகை கல்லூரி அருகில் உள்ள மின்சார டிராண்ஸ்பார்மரில் ஏறி நின்று பழுது பார்த்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. அப்போது அந்த வழியாக வருகை புரிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓடோடி சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

சக ஊழியர்களின் உதவியுடன் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுவரை அமைச்சரும் உடன் இருந்து, தேவையான உதவிகளை செய்தது  மட்டுமல்லாமல், மின்சாரம் தாக்கிய நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். அமைச்சரின் இந்த பொறுப்பான செயலுக்கு  அங்கிருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

அந்த காட்சிகள் இதோ:

2

3

4

5

6

7