பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கும் போது, பொங்கல் திருநாளுக்காக ரூ.1000 வழங்க முதல்வர்
எடுத்துள்ள இந்த முடிவு வரலாற்று சாதனை என புகழாரம் சூட்டி உள்ளார்.

இதே போன்று அமைச்சர் தங்கமணியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அப்போது, தமிழகத்தில் ஒரு சாமானியனின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு சான்றாக, ஒரு சாமானியனின் தேவையை புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கும் முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.