எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை அரசு மருத்துவமனைக்க  வந்தார். அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டரிடம் பேசி அவர் கேட்ட பகுதியிலேயே இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்..

சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றுத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.