இருமுடி கட்டி கார்களில் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, யதீஷ் சந்திரா என்ற ஐபிஎஸ் அதிகாரி மரியாதைக்குறைவாக நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் பல கெடுபிடிகளை தாண்டி சன்னிதானத்தை அடைந்தார். அப்போது கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டத்தில் குலுங்கியபடி அழுதுகொண்டே சாமி தரிசனம் செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெகுவாக  பகிரப்பட்டு வருகிறது.