Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் திருப்புமுனை..! போனில் பேசிய லேடி யார் தெரியுமா..?

தமிழக மீன் வளத்துறை அமைச்சர், தன் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டதாக ஒரு பெண் பேசி வெளியான ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

minister jayakumar audio issues and found new case against sindu
Author
Chennai, First Published Nov 11, 2018, 7:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழக மீன் வளத்துறை அமைச்சர், தன் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டதாக ஒரு பெண் பேசி வெளியான ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் கேட்ட போது, "தன்னை போன்றே யாரோ பேசி இது போன்று வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அரசியல் காழ்புணர்ச்சிக்காக இவ்வாறு செய்து உள்ளனர் என்று கூலாக சென்றுவிட்டார். இதற்கு முக்கிய காரணம் தினகரன் ஆதரவாளர் என்பது தெரியும் என்று அன்றே தெரிவித்து இருந்தார் அமைச்சர்.

இந்த நிலையில் அந்த ஆடியோவில் பேசிய பெண், ஒரு ப்ளாக் மெய்லர் என போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அமைச்சர் தொடர்பான ஆடியோவை வெளியிட்ட சாந்தி, சிந்து ஆகியோர் மீது திருமண ஆசைக்காட்டி நகை பணம் பறித்ததாக சந்தோஷ் என்பவர் சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் மூன்று மாதத்தில் மட்டும், சந்தோஷிடம் சிந்து  மூன்றே முக்கால் மணி நேரம் செல்போனில் பேசி உள்ளது தெரிய வந்து உள்ளது. இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சந்தோஷ் சிந்து வீட்டின் அருகில் வசிப்பவராம்.
 
அவரை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி, கணேஷ் என்பவரும் சிந்து, அவரது தாயார் சாந்தி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், சாந்தி மற்றும் சிந்துவின் ஒரு வழக்கை நடத்தி வருவதாகவும், அதற்கான பீஸ் கேட்டபோது பாலியல் தொல்லை கொடுப்பதாக தன் மீது வழக்கு தொடர்வேன் என தன்னையே மிரட்டி பணம் கேட்டதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரித்த போது, மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது
 
அதில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மட்டும், அவமானத்திற்கு அஞ்சும் ஆண்களை குறி வைத்து பாலியல்  தொடர்பாக பேசி மிரட்டி ஆடியோவாக பதிவு செய்து அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது 

பொய்யான பாலியல் புகார் தொடுத்து பலரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்து உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தங்களது உண்மையான பெயர்களை மறைத்தும் போலி விலாசம் கொடுத்தும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளதாக விவரம் தெரிய வந்து உள்ளது. விசாரணையில் இவர்களில் உண்மையான பெயர் மேரி சாந்தி என்பது தாயார் பெயர், மேரி சிந்து என்பது சிந்துவாக அறியப்பட்ட சாந்தியின் மகள் பெயர்.இதுமட்டும் இல்லாமல், மேரி சாந்தி, சிந்துவை தன் அக்காள் மகள் என உறவு முறை மாற்றி குறிப்பிட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 2010 ஆம் ஆண்டு நம்மாழ்வார் பேட்டையில் உள்ள பாதிரியார் பால் சோவியத் என்பவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர் இவர்கள் .

அதே போன்று தண்டர்யார்பேட்டையை சேர்ந்த ஜெபமாலை என்பவர் மீதும் போலியான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு நடைப்பெற்று வந்தது. விசாரணையில் இவர்கள் இருவரும் பொய்யான  பாலியல் புகாரை பாதிரியார் மீது சுமத்தியது தெரிய வந்ததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தவிர, 2013 ஆகஸ்ட் மாதம் பாதிரியார் ஜோசப் மீதும் பொய்யான பாலியல் புகாரை தெரிவித்து, அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் அதனையும் மீறி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து உள்ளார். அதன் பின், பாதிரியார் ஜான் பிரிட்டோ என்பவரை மிரட்டி, அவர் மீது பாலியல் புகார் கொடுப்பதாக கூறி மன உளைச்சலுக்கு ஆளான பாதிரியார் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து  உள்ளார் . மேரி  சாந்தி மற்றும் சிந்துவின் இந்த செயலால், பல்வேறு நபர்கள் இது போன்று பாதித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது

அதன் பின், அமைச்சர் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் சிக்கிய பெண் மேரி சிந்து, 2014 ஆம் ஆண்டு பாதிரியார் எம்.ஏ வின்சன்ட் என்பவர் மீது, தான் படிக்கும் போதே தன்னிடம் நெருங்கி பழகினார் என புகார் தெரிவித்து அந்த புகாரும் பொய்யான பாலியல் புகார் என தெரிய வந்துள்ளது

இப்படியுமாக இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் தங்கி, தங்களது பெயர் மற்றும் உறவு முறைகளையே மாற்றி வெளி உலகிற்கு தெரிவித்து வந்து உள்ளனர். மேலும் பணம் பறிக்கும் கும்பலுடன் சேர்ந்துக்கொண்டு பெரிய நெட்வொர்க் இருக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் விசாரணையில் கண்டுப்பிடித்து உள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் பேசும் ஆடியோ வெளியாகி தமிழ் நாட்டையே பரப்பரப்பாகியது.

இந்த தருணத்தில் மேரி சாந்தி மற்றும் சிந்து மீதான பல்வேறு புகார்கள் மற்றும் அவர்கள் ப்ளாக் மெயிலர்கள் என தெரிய வந்ததை அடுத்து அமைச்சர் ஜெயகுமார் விஷயத்திலும் உண்மை உண்மை  வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios