திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து வருவாய் என்கிற பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் கோபால் என்பவரின் வீட்டில், வளர்த்து வந்த வேப்ப மரத்தில் இருந்து திடீரென பால் வழிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரத்தில் சிவ நாக சக்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். ஏற்கனவே இந்த மரம் இருக்கும் இடத்தின் உரிமையாளர், கோபால் இந்த வேப்பமரத்தை கடவுளாக வணங்கி வந்தார். அதே போல் அந்த பகுதியில் உள்ள மக்களும் இந்த மரத்தை தெய்வமாக வணங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

இந்நிலையில் திடீரென இந்த மரத்தில் இருந்து பால் வடிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த வேப்ப மரத்தை பார்க்கும் ஆர்வத்துடன் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். சிலர் வீடியோ எடுத்து இதை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல், வெளி ஊர் மக்களும் இந்த இடத்திற்கு வருகை புரிந்து வேப்ப மரத்தை வணங்கி வருகின்றனர்.