Asianet News TamilAsianet News Tamil

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரிக் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Mettur dam reached its full capacity and flood alert for 12 districts
Author
Mettur Dam, First Published Nov 14, 2021, 6:08 PM IST

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரிக் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 812 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரத்து 396 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur dam reached its full capacity and flood alert for 12 districts

அணையின் நீர் மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவும் வினாடிக்கு 350 கன அடியில் இருந்து 150 கன அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.

Mettur dam reached its full capacity and flood alert for 12 districts

கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 518 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 308 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.82 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு ஆயிரத்து 312 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு ஆயிரத்து 788 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவிரிக் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios