67வது முறை… 100 அடியை எட்டியது மேட்டூர் அணை….! டெல்டா விவசாயிகள் ஹேப்பி..
67வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருக்கிறது.
67வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பல வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
வெள்ளியன்று 97.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 11 மணிக்கு 100 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 16 கண் மதகு அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள், மேட்டூர் எம்எல்ஏ சதாவிசம் ஆகியோர் மலர்களை தூவி மகிழ்ந்தனர். மேட்டூர் அணையானது 2020ம் ஆண்டு 4 முறை 100 அடியை தொட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாகவும் ஒட்டு மொத்தமாக 67வது முறையாகவும் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது.
அக்டோபர் 27ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பாசனத்துக்கான தேவை குறையும். அந்த தருணத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.