தொடங்கியது கொரோனா தடுப்பூசி மெகா முகாம்… 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிறு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் இன்று 6வது நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 6வது கட்ட முகாம் தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த முறையைவிட இப்போது அதிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இரவு 7 மணி வரை முகாம் நடக்க உள்ளது. அதற்காக 66 லட்சம் தடுப்பூசிகளை தமிழக அரசு கையிருப்பில் வைத்திருக்கிறது. 2வது தவணை செலுத்தி கொள்ளாத 57 லட்சம் பேருக்கு இன்றைய முகாமில் அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளது.