ராமநாதபுரத்தில் டிராக் வியூ என்ற செல்போன் செயலியைப் பயன்படுத்தி பல பெண்கள் வாழ்வை அந்தரங்கத்தை தகவல்களைத் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் விபட்டினத்தை அடுத்துள்ள தாமரைகுளத்தைச் சேர்ந்தவன் தினேஷ் குமார். எம்.சி.ஏ. பட்டதாரியானஇவன், படிப்புக்கேற்ற வேலைக்குச் செல்லாமல், ராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான். அங்கு தன்னுடன் பணியாற்றிய பெண்களிடமும், மாணவிகளிடமும் பாலியல்அத்துமீறலில் ஈடுபட்டதால் வேலையை இழந்த தினேஷ் குமார், தான் கற்றுக் கொண்ட தொழில்நுட்பம் மூலம் பெண்களை பாலியல்விருப்பத்திற்கு இணங்க வைக்க முடிவு செய்துள்ளான்.


 
இதற்கு பெரும் உதவி புரிந்திருப்பது ட்ராக் வியூ என்ற செயலி தான் என அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்தசெயலியை தனக்கு தெரிந்த பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களில் செல்போனில் அவருக்கே தெரியாமல் தரவிறக்கம் செய்த தினேஷ்குமார், அதை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தியுள்ளான். மேலும், பெண்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிராக் வியூ செயலியை தனது செல்போன் மூலமே இயக்கி, பெண்களின் செல்போனின் கேமரா பதிவு செய்யும்காட்சிகளை, அவனது செல்போனில் இருந்து கண்காணித்துள்ளான். மேலும், பெண்கள் தனியாக அரைகுறை ஆடையுடன் இருப்பதையோ அல்லது தங்களது கணவருடன் பாலுறவு கொள்ளும் காட்சிகளையோ, தினேஷ்குமார் கண்காணித்துப் பதிவு செய்துள்ளான். 
 
இவ்வாறு டிராக் வியூ செயலியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தினேஷ் குமார், செல்போனில் பதிவு செய்யப்பட்ட அந்தங்க காட்சிகளை வைத்து பெண்களை மிரட்டியுள்ளான். சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு பாலியல்விருப்பத்திற்கு இணங்க நிர்பந்தித்து அவர்களது வாழ்வை சீரழித்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடியோக்களை இணையதளத்தில் பரவ விட்டு விடுவதாக மிரட்டியதால், அச்சம் காரணமாக பெண்கள் யாரும் இவன் மீது புகார்அளிக்க முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்குசென்றுள்ளான் தினேஷ் குமார். அவனிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் அனுப்பி வைத்த ஸ்மார்ட்ஃபோனைகொடுத்த பெண், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார்.
 
அந்த ஸ்மார்ட் போனில் தனது வழக்கமான டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்த அவன், அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான். அவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதனை நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளான். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
 
உடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்துதேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்குசென்று சோதனையிட்ட போது அங்கிருந்த லேப்டாப், செல்போன்கள் மற்றும் சுமார் 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர். இதில் கொடுமை என்ன என்றால் தினேஷ் தனது உடன் பிறந்த சகோதரியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வைத்திருந்தது தான். மேலும் பத்து பெண்களின் ஆடைகளும் அங்கு இருந்தது. அது குறித்து விசாரித்த போது, தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்களின் நினைவாக வீட்டில் வைத்திருப்பதாக தினேஷ் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர். இதனால் தினேஷ் சைக்கோவாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.