சென்னையில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பல தொழிலதிபர்களிடம்  பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மாதவரம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா என்கிற  27 வயதான பெண்.  இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக  வசித்து வருகிறார். 

கணவரை விட்டு பிரிந்த பின், வாழ்வாதாரத்திற்காக அண்ணநகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கு தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இவர் கூறிய அறிவுரை படி நிர்மலா தன் வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே மசாஜ் சென்டர் ஒன்றை துவங்கினார். போன வாரம் இந்த தொழிலதிபர், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று நிர்மலாவிடம் கூற அவர், தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். 

மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர், நிர்மலா மற்றும் அவருடைய தோழி ஷீலா ஆகியோருடன் மிகவும் ஜாலியாக இருந்துள்ளார். மேலும் 
 2 நாளுக்கு முன்பும் நிர்மலா வீட்டுக்கு சென்றார். அங்கே இருந்த தனது தோழி, மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை தொழிலதிபருக்கு நிர்மலா அறிமுகம் செய்து வைத்தார். பிறகு நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, திடீரென 4 பேர் கொண்ட ஒரு கும்பல் நிர்மலா வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த  2 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் ஆகியவதரி பறித்து கொண்டு தப்பியது. இதனால் தொழிலதிபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாதவரம் பால்பண்ணை போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

இந்த புகார் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலா, ஷீலா, ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கொள்ளை கும்பல் நிர்மலாவின் செட்டப் என்று தெரியவந்தது. தொழிலதிபரை மிரட்டி பணத்தை பறித்து கொள்ளையடித்தவர்கள் உள்பட 7 பேரும் பணம் நகை ஆகியவற்றை பங்குபிரித்து கொள்ள பிளான் போட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் மூன்று பேருடன், கார்த்திகேயன், புகழேந்தி, அருண்குமார், லட்சுமணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் இப்படியே நிறைய பேரிடம் பணத்தை ஏமாற்றி பிடுங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பல் பல தொழிலதிபர்களிடம் இது போல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.