போதை மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கமல் (எ) கமலநாதன் (30). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் சிறுமி. ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலை வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு திரும்பினார். தனியாக நடந்து சென்ற அவரிடம் கமலநாதன் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் போதை மாத்திரை கலந்த மிட்டாய் கொடுத்துள்ளார். மயக்கத்தில் இருந்த சிறுமியை அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பலாத்கார செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராஜேஸ்வரி வழக்கு பதிந்தார். விசாரணையில், போதை மாத்திரையை மிட்டாய் என கொடுத்து ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து கமலநாதனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.