கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்த வந்தவர் மக்கள் டாக்டர்' வெங்கடாசலம். இவருடைய மறைவு எங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினரை இழந்தது போல உள்ளது என கண்ணீர் மல்க கூறி உள்ளனர்.  

கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் பகுதி. இவர்களின்  மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் தான் மக்கள் டாக்டர் வெங்கடாசலம். இவர் தன் குடும்பத்துடன் இருந்ததை விட மக்களுக்காகவே வாழ்ந்தவர். நோய் வாய் படும் எவராக இருந்தாலும், அவர்களுக்கு 50 பைசா பீஸ் மட்டுமே வாங்கி சிகிச்சை அளித்து வந்தார். பல ஆண்டுகளாக இதே போன்று அந்த ஊர்  மக்களுக்கு அன்புடன் சிகிச்சை அளித்து சமீபத்தில் தான் ரூ.5 வரை உயர்த்தினார்.

அதிலும் யாரிடமும், வாய் திறந்து பைசா கேட்காத மனிதர்...

யாரவது பணம் இல்லாமல் சிகிச்சை பெற வந்தாலும், அவருக்கு  தன் கையில் இருக்கும் பணத்த கொடுத்து மருந்து வாங்க வைப்பாராம்.

அதுவும் முடியவில்லை என்றால், அவரே வெளியில் சென்று தேவையான மருந்தை வாங்கி அவர்களுக்கு கொடுத்து, மாபெரும் உதவி செய்தி அவர்களின் உயிரை காப்பவர் தான் மக்களின் மருத்துவர். அதுமட்டுமா, கோவில் பணிகள் என்றால் அவருக்கு அவ்வளவு முக்கியமாம்....கோவிலுக்காக அதிகமாக பணிகள் செய்வாராம்.

தன்னுடைய வீட்டிலேயே சிறிய கூரை போட்டு சிறிய கிளினிக் வைத்து நடத்தி வந்தாராம். கடந்த ஆண்டு தான் கூரையை சரி செய்து விட்டு சிறிய மாற்றம் செய்து உள்ளார்.

எப்போதும் விளம்பரம் பிடிக்காத மனிதர்
 

எத்தனையோ மருத்துவர்கள் பற்றி விளம்பரம் வந்தாலும், தன்னை பற்றி பெருமையாக யாரிடமும் சொல்லி, விளம்பரம் செய்து விட கூடாது என உறுதியுடன் இருந்தாராம்.

இவர் பல ஆயிராம் மக்களுக்கு சிகிச்சை அளித்து உள்ளார். அதில் எத்தனையோ பேர் வெளி ஊர்களிலும் வெளி நாடுகளிலும் உள்ளனர். அதில் பலரும், மருத்துவரை பற்றி, அவர் சிகிச்சை அளித்த விதம் பற்றியும் உதவி செய்யும் மனம் பற்றியும் கூறி, கண்ணீர்  வடிகின்றனர். 

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவரை போன்ற ஒரு டாக்டர் மீண்டும் இந்த நாட்டுக்கு கிடைக்க மாட்டார் என குனியமுத்தூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இவருடைய மருத்துவ சேவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து உள்ளது. மருத்துவரின் இழப்பு அந்த ஊருக்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இவருடைய இறுதி அஞ்சலிக்கு கூட உறவினர்களை விட, அவரிடம் சிகிச்சை பெற்ற  அப்பால் குடும்பங்களே அதிகமாக வந்து உள்ளனர்.