Asianet News TamilAsianet News Tamil

Madras University Result : தொலைதூரக் கல்விகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! – சென்னை பல்கலை அறிவிப்பு!

தொலைதூரக் கல்வி மூலம் படித்து தேர்வுஎழுதியவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

Madras university declares distance education results today
Author
First Published Jun 17, 2022, 6:57 AM IST

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகம் இருந்து வந்ததால் அனைத்தும் ஆன்லைன் மயமாகின. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. வீட்டு பெண்கள் உள்ளிட்ட பலர் தொலைதூர கல்விப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட பாட பகுதிகள் நீக்கப்பட்டு அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகளும் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முக்கிய செய்தி !! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. ஜூன் 20 ஆம் தேதி வெளியீடு..

தற்போது கோடை விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 253 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 253 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை மாஸ்க் அணியச் சொல்லுங்கள்... கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!!

இதனிடையே, தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு https://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

கவனத்திற்கு!! பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. எப்போது வெளியீடு..? புது அறிவிப்பு..
 

Follow Us:
Download App:
  • android
  • ios