விழுப்புரம் அருகே 3 குழந்தைகளின் தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பட்டதாரி ஆசிரியன் ஒருவன், கள்ளக்காதலியின் 4 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   விழுப்புரம் அருகே தெலி கிராமத்தில் 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவர், வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தணிகைவேல் என்பவனின் பேச்சில் மயங்கி, காதல் வலையில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில் தணிகைவேலுவை அடிக்கடி வீட்டுக்கு வரவைத்த அந்த பெண், உல்லாசம் அனுபவித்துள்ளார். இதை அரசல்புரலாக தெரிந்து கொண்ட கணவர், பலமுறை புத்திமதி சொல்லியும் அந்த பெண் திருந்தவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த கணவர் மூத்த மகனை மட்டும் அழைத்துக் கொண்டு தனியாக வசித்து வருகிறார்.    இளைய மகனும், மகளும் தந்தையுடன் செல்லாமல் தாயுடனே இருந்த நிலையில், அடிக்கடி வீட்டுக்கு வந்து, அந்த பெண்ணுடனான தகாத உறவை தொடர்ந்த ஆசிரியர் தணிகைவேல், 4 வயது பிஞ்சுக்குழந்தையையும் அனுபவிக்க முடிவு செய்துள்ளான். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த ஆசிரியர் தணிகைவேல், 4 வயது பிஞ்சுக்குழந்தை என்றும் பாராமல் துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த தாய், வலியில் துடிக்கும் மகளை கண்டு வேதனையடைந்தாலும், கள்ளக்காதலன் தணிகைவேலை விட்டுப்பிரிய மனமில்லாமல், அவனை கண்டிக்காமல் இருந்துள்ளார்.   இதனால் நல்லதாகப் போய்விட்டது என்று தணிகைவேலு தொடர்ந்து சின்னஞ்சிறு குழந்தையை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளான். இந்த நிலையில், குழந்தைக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயந்துபோன தணிகைவேல், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவனே குழந்தையை அழைத்துச் சென்றுள்ளான். குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து, அது குறித்து தணிகைவேலிடம் கேட்டபோது, அவன் சமாளித்துள்ளான். உடனடியாக, வளவனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த மருத்துவர்கள், அவர்களிடம் தணிகைவேலுவை பிடித்துக் கொடுத்துள்ளனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் தணிகைவேல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் அவனது கள்ளக்காதலி பெற்றமகள் என்றும் பார்க்காமல் குழந்தையை அவனது இச்சைக்கு பயன்படுத்த அனுமதித்ததால் இருவர் மீதும், போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.   தணிகைவேல் கைது செய்யப்பட்ட நிலையில் அவனது கள்ளக்காதலியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.