அடுத்தடுத்து பற்றி எரியும் வாகனங்கள்! நேரடி வீடியோ காட்சி...

தருமபுரியில் அடுத்தடுத்து 4 வாகனங்களில் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கொப்பரை தேங்காய் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

First Published Oct 21, 2018, 1:02 PM IST | Last Updated Oct 21, 2018, 1:05 PM IST

தருமபுரியில் அடுத்தடுத்து 4 வாகனங்களில் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கொப்பரை தேங்காய் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லாரியில் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால் பின்னால் நிறுத்தி இருந்த மற்றொரு லாரி மற்றும் 2 கார்கள் என மொத்தம் 4 வாகனங்களில் தீ பரவியது.

விடியற்காலை என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Video Top Stories