3 பெண்களை திருமணம் செய்து கொண்ட லாரி டிரைவர், குடும்ப பிரச்னையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரியை அடுத்த வேப்பிலைப்பட்டி செங்கான் நகரை சேர்ந்தவர் முருகன் (50). லாரி டிரைவர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கோவிந்தம்மாள், மகாலட்சுமி, அம்பிகா. இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் மனைவிகளிடம், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து முருகன் வீடு திரும்பினார். அப்போது, அவர் மது அருந்திவிட்டு இருந்தார். இதனா, கணவன்-மணைவிகளுக்கு இடையே கடும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

நேராக டாஸ்மாக் கடைக்கு சென்ற அவர், மதுபாட்டிலை வாங்கி அதில், விஷத்தை கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதை அறிந்த குடும்பத்தினா, உடனடியாக அவரை மீட்டு, கடத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி முருகன் நேற்றிரவு பரிதாபமாமக இறந்தார்.

புகாரின்படி கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.